கமல் ஹாசனுக்கு தெரியாமல் அக்ஷரா ஹாசன் செய்த வேலை
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடாஷா என்ற ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை அக்ஷரா ஹாசன். இந்தியில் அபிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான சமிதாப் படத்தில் நடித்து சினிமாத்துறையில் காலெடி எடுத்து வைத்தார்.
கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிற்பு போன்ற படங்களில் சைட் ரோல் நடிகையாக நடித்திருப்பார். ஃபிங்கர் டிப் என்ற வெப் தொடரில் நடித்தப்பின் தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா ஹாசன், மும்பையில் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அப்பாவுக்கு தெரியாமல் ஏதாவது மறைத்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு அக்ஷரா ஹாசன், அதை சொன்னால் இப்போது மாட்டீப்பேனே என்று கூறி ஒரு ரகசியத்தை உடைத்துள்ளார்.
என் தோழி ஆட்டோ ஒன்று வைத்திருந்தாள், அதை வாங்கி வேகமாக சென்று திரும்பினேன். ஆட்டோ தடுமாறி பெல்டி அடித்தபடி சென்றதில் எனக்கு அதிக அடிகள் பட்டது. இதைதான் அப்பாவிடம் சொல்லவில்லை, என்று அப்பா சாரி என்று தெரிவித்துள்ளார் அக்ஷரா ஹாசன்.